பக்தனின் பாடல்

இளநீர் இழந்தேன்.
வெற்றுத்திண்ணை வெறுத்தேன்.

பாவம் புரிந்தால்
‘ஜென்மங்கள் தொடருமோ ?’ என்ற
பயம் என்னைப் பற்றியதால்,
பாலங்கள் தோறும் உன் நினைவாக
சுற்றினேன்.

தெளிவினைத் தொலைத்து
ஒளியினை ஒளித்து
களியினை களைந்து
விழியினை நனைத்து
உருகித் திளைத்து
வேண்டினேன்……………………………………….

என் வேண்டுதல் தவறு
என்பது புரியாமல்.

நீயோ சிகரம்,
வாழ்வின் அகரம்.
கண் திறந்தாய்.
நான் யாரென்று எனக்கே உணர்த்த !!!

Comments