மழை

தண்ணீர் தன்னைத் தீண்டிவிட்ட மகிழ்ச்சியில் ,
சிரித்தது ஒற்றை ரோஜா.
ஒரு துளி மழையை உள்வாங்கி
மகிழ்ந்தது சிப்பி.
வானம் திறந்தததை வெறித்துப்பார்த்து பூரித்தது
வெடித்த நிலம்.
குடிசையின், கிழிந்த கூரை வழி
தூளியில் தூங்கிய குழந்தையின் மீது விழுந்த,
மழை நீரை,
முறைத்துப் பார்த்து,
தன் கைகளை கூரைகளுக்கு நேர் கீழே விரித்து,
பெருமூச்சு விட்டாள் ,
ஒரு ஏழைத்தாய் .

Comments