ஆயிரம் பொய் சொல்லிய ஆனந்த ராகவன்

நேர்முகத் தேர்வு !!!!
 
அறை எண் 34 – ல்  நடந்து கொண்டிருந்தது நேர்முகத் தேர்வு . உள்ளே சென்று திரும்பி வரும் அதனை பேர் முகத்தையும் ஆராய்ந்து கொண்டு இருந்தேன் நான். கிட்டத்தட்ட பத்தில் ஆறு பேரின் முகம் சற்று திருப்தியைத் தர அடுத்து  அறையினுள் செல்ல ஆயத்தமானேன். என்னைவிட என் நண்பர்கள் தான் அதிக பதட்டத்துடன் இருந்தார்கள். “கண்டிப்பா வேலே கிடைச்சிருண்டா  , கலக்கு ” என்று சொல்லி உள்ளே அனுப்பி வைத்தார்கள் .
 
முதல் பத்து நிமிடங்கள் வழக்கம்போல , அறிமுகம் . பின், ஒரு இருபது நிமிடங்கள் பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் . ஓரளவு சமாளித்து விட்டேன் .  அடுத்து சில நிமிடங்கள் , என்னைப் பற்றி . HR மேனேஜரின் சில கேள்விகளுக்கு பதல் சொல்ல வேண்டும் .
 
எதிர்பார்த்த படியே சில கேள்விகள்
 
HR                :  ” நீங்கள் ஏன் இந்த கல்லூரியைத் தேர்வு செய்தீர்கள் ??”
நான்           :  ” எனக்கு விருப்பமான பாடப்பிரிவில் , இந்த கல்லூரிதான் தலை சிறந்தது “
மனசாட்சி:  ” நான் படித்த லேக்ஷனத்திற்கும் , வாங்கிய மதிப்பெண்களுக்கும் இந்த கல்லூரி தன கிடைத்தது “
 
HR                :  ” உங்களுக்கு  ஏன் இந்த பாடப்பிரிவில் விருப்பம் அதிகம் ??”
நான்           :  ” வளர்ந்து வரும் , இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கும் ஒன்று IT . சந்தேகமில்லாமல்  “
மனசாட்சி:  ” இருப்பதிலேயே குறைந்த வயதில் அதிகம் சம்பாதிக்க உதவும் ஒரு field இதுதான் . காசு கொடுக்காமல் AC இல் உட்கார்ந்து facebook , orkut  எல்லாவற்றையும் புரட்ட வசதியானதும் கூட”
 
HR                :  ” நீங்கள் ஏன் எங்கள் கம்பெனியை  தேர்வு செய்தீர்கள் ??”
நான்           :  ” தகவல் தளங்களில் படித்த அனைத்தையும் ஒப்புவித்தேன்”
மனசாட்சி:  ” எங்கள் கல்லூரி campus தேர்வுக்க வரும் பத்து பதினைந்து கம்பெனிகளில் இதுவும் ஒன்று . அதிகம் சம்பளம் . இரண்டு வருடம் உருப்படியாக உழைத்தால் போதும் . சாதாரண நடுத்தர வர்கத்தின் எந்த கஷ்டமும் இல்லாமல் சந்தோசமாக வாழலாம் . “
 
HR                :  ” இன்னும் ஐந்து வருடங்களில் எங்கே , எப்படி , என்ன நிலையில்   இருப்பீர்கள்  ??”
நான்           :  ” நமது கம்பெனியிலேயே Team  Leader , இன்னும் முயற்சி செய்து மேனேஜர் போன்ற நல்ல நிலமையல் இருப்பேன் “
மனசாட்சி:  ” சத்தியமாக உங்கள் கம்பெனியில் இருக்க மாட்டேன் . ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக இருப்பேன் . கார் , 2BHK பிளாட் எல்லாம் வாங்கி ஒரு நல்ல நிலைமையில் இருப்பேன்  “
 
மனசாட்சியை formal shirt குள் மறைத்து tie வைத்து பூட்டி விட்டுதானே உள்ளேயே வந்தேன் . 
 
RESULT  : SELECTED
 
நாராயணா !!! என்ன மன்னிச்சிடு …..

Comments